திருமுல்லைவாயலில் சோகம் : திடீரென வலிப்பு ஏற்பட்டு கிணற்றில் விழுந்தவர் பலி
ஆவடி: பல் துலக்கிக் கொண்டிருந்தபோது வலிப்பு ஏற்பட்டு கிணற்றில் விழுந்தவர் பரிதாபமாக இறந்தார். ஆவடி அருகே திருமுல்லைவாயல் வைஷ்ணவி நகர் 11-வது தெருவை சேர்ந்தவர் ரவி (40). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். மனைவி மைதிலி. ஒரு மகன் உள்ளார். ரவிக்கு வலிப்பு வருமாம். இன்று காலை வீட்டில் உள்ள கிணறு அருகே நின்றுகொண்டு ரவி பல் துலக்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. நிலைதடுமாறி கிணற்றில் விழுந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த மைதிலி, கூச்சல் போட்டார்.
பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடிவந்து ரவியை மீட்க போராடினர். தகவல் கிடைத்ததும் ஆவடியில் இருந்து தீயணைப்பு அதிகாரி ஜெயச்சந்திரன் தலைமையில் வீரர்கள் வந்தனர். அதற்குள் ரவி நீரில் மூழ்கி இறந்துவிட்டார். தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி ரவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து திருமுல்லைவாயல் எஸ்.ஐ. மோகன் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/28/2012 1:41:41 PM
-Updated 10/28/2012 1:02:35 PM
-Updated 10/27/2012 1:04:37 PM
-Updated 10/27/2012 12:56:02 PM
-Updated 10/27/2012 12:55:47 PM
-Updated 10/27/2012 12:55:32 PM
-Updated 10/27/2012 12:55:18 PM
-Updated 10/27/2012 12:07:04 PM
-Updated 10/27/2012 12:06:55 PM
-Updated 10/27/2012 11:45:46 AM
-Updated 10/27/2012 11:45:36 AM
-Updated 10/27/2012 10:55:06 AM
-Updated 10/27/2012 10:54:54 AM
-Updated 10/27/2012 10:54:37 AM
-Updated 10/27/2012 10:54:25 AM