கீழ்பாக்கம்: சென்னை தலைமை செயலக காலனி பராக்கா மெயின் ரோட்டில் மளிகை கடை நடத்துபவர் அருள்ராஜ் (26). அப்பகுதி ஒத்தவாடை தெருவில் உள்ள பேக்கரியில் வேலை செய்பவர் ராஜேந்திரன் (20). இந்த பகுதியில் நேற்றிரவு தலைமைச் செயலக காலனி ஸ்டேஷன் எஸ்.ஐ. கலைச்செல்வி மற்றும் 3 போலீசார் ஸ்கூட்டியில் ரோந்து வந்தனர். பேக்கரி அருகே நின்ற பைக் பற்றி விசாரித்துள்ளனர். யாருடைய பைக் என தெரியாது என்று ராஜேந்திரன் கூறியுள்ளார். இதனால் கோபம் அடைந்த எஸ்ஐ, ராஜேந்திரனை அடித்துள்ளார். இதில் அவரது முட்டியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மளிகை கடைக்கு சென்ற எஸ்ஐ கலையரசி, ‘‘இந்த பகுதியில் பானி பூரி விற்கும் ஆளை பற்றி தெரியுமா’’ என அருள்ராஜிடம் கேட்டுள்ளார்.
தெரியாது என்றதால் அவரையும் லத்தியால் சரமாரி அடித்ததாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் பரவியதும் வியாபாரிகள் திரண்டு வந்தனர். காயம் அடைந்த இருவரையும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சம்பவ இடத்துக்கு வந்தார். இதுசம்பந்தமாக வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் விக்கிரமராஜா தலைமையில் நூற்றுக்கும் அதிகமான வியாபாரிகள் திரண்டு தலைமைச் செயலக காலனி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். போலீசாரை கண்டித்து கோஷங்கள் போட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. வியாபாரிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/28/2012 1:41:41 PM
-Updated 10/28/2012 1:02:35 PM
-Updated 10/27/2012 1:04:37 PM
-Updated 10/27/2012 12:56:02 PM
-Updated 10/27/2012 12:55:47 PM
-Updated 10/27/2012 12:55:32 PM
-Updated 10/27/2012 12:55:18 PM
-Updated 10/27/2012 12:07:04 PM
-Updated 10/27/2012 12:06:55 PM
-Updated 10/27/2012 11:45:46 AM
-Updated 10/27/2012 11:45:36 AM
-Updated 10/27/2012 10:55:06 AM
-Updated 10/27/2012 10:54:54 AM
-Updated 10/27/2012 10:54:37 AM
-Updated 10/27/2012 10:54:25 AM