காபூல்: ஆப்கானிஸ்தானின் மேமானா நகரில் உள்ள மசூதியில் இன்று நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 32 பேர் உடல் சிதறி பலியாயினர். 33 பேர் படுகாயம் அடைந்தனர். ஆப்கானிஸ்தானில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிரயாப் மாகாணம் மேமானா நகரில் உள்ள மசூதியில் தொழுகை நடத்துவதற்காக இன்று ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது போலீஸ் உடையில் வந்த தற்கொலை படை தீவிரவாதி, கூட்டத்துக்குள் புகுந்து தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தான். இதில் பாதுகாப்பு பணியில் இருந்த 15 போலீசார் உள்பட 32 பேர் உடல் சிதறி பலியாயினர். 34 பேர் படுகாயம் அடைந்தனர். குண்டு வெடிப்புக்கு உடனடியாக எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!
-Updated 10/28/2012 1:41:41 PM
-Updated 10/28/2012 1:02:35 PM
-Updated 10/27/2012 1:04:37 PM
-Updated 10/27/2012 12:56:02 PM
-Updated 10/27/2012 12:55:47 PM
-Updated 10/27/2012 12:55:32 PM
-Updated 10/27/2012 12:55:18 PM
-Updated 10/27/2012 12:07:04 PM
-Updated 10/27/2012 12:06:55 PM
-Updated 10/27/2012 11:45:46 AM
-Updated 10/27/2012 11:45:36 AM
-Updated 10/27/2012 10:55:06 AM
-Updated 10/27/2012 10:54:54 AM
-Updated 10/27/2012 10:54:37 AM
-Updated 10/27/2012 10:54:25 AM