ஆலந்தூர்: திருவொற்றியூர் காலடிபேட்டையை சேர்ந்தவர் ஹேமந்த்சந்திரன் (32). மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இன்ஜினியர்.நேற்று மதியம் வேலை முடிந்ததும் நங்கநல்லூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு பைக்கில் புறப்பட்டார் ஹேமந்த்சந்திரன். பழவந்தாங்கல் சிக்னல் அருகே இடதுபக்கம் திரும்பியபோது, கிண்டியில் இருந்து தாம்பரம் நோக்கி பாட்டில்கள் ஏற்றிக் கொண்டு அதிவேகமாக மினி லாரி ஒன்று வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் பைக் மீது மோதியது. இதில், ஹேமந்த்சந்திரன் கீழே விழுந்தார். அவர் மீது மினி லாரி ஏறி இறங்கியது. மேலும், அளவுக்கு அதிகமாக பாட்டில்கள் ஏற்றி வந்ததால் பாட்டில்கள் சிதறி ஹேமந்த்சந்திரன் மீது சரிந்தது. இதில் அவர் இறந்தார். தகவல் அறிந்து பரங்கிமலை போக்குவரத்து போலீசார் வந்து, லாரி டிரைவரான நெற்குன்றத்தை சேர்ந்த சிவகுமாரை (31) கைது செய்து விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/25/2012 4:02:38 PM
-Updated 10/25/2012 4:00:12 PM
-Updated 10/25/2012 3:59:57 PM
-Updated 10/25/2012 3:59:46 PM
-Updated 10/25/2012 3:59:34 PM
-Updated 10/25/2012 2:42:57 PM
-Updated 10/25/2012 2:42:44 PM
-Updated 10/25/2012 2:32:43 PM
-Updated 10/25/2012 2:32:31 PM
-Updated 10/25/2012 2:32:17 PM
-Updated 10/25/2012 2:18:21 PM
-Updated 10/25/2012 2:18:11 PM
-Updated 10/25/2012 2:18:02 PM
-Updated 10/25/2012 12:52:18 PM
-Updated 10/25/2012 12:51:34 PM