மின்வெட்டு, விலைவாசி உயர்வை கண்டித்து தாம்பரம், பல்லாவரத்தில் திமுக ஆர்ப்பாட்டம்
தாம்பரம்: தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு, விலைவாசி உயர்வை கண்டித்து திமுக சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்
நடந்தது. தாம்பரம் பஸ் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தலைமை வகித்தார். நகராட்சி கிடப்பில்
போடப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து நிறைவேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
கவுன்சிலர்கள் காமராஜ், இந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லாவரம் நகர திமுக சார்பில் பஸ் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் இ.கருணாநிதி தலைமை வகித்தார். பரங்கிமலை ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் விசுவநாதன் தலைமையில் செம்பாக்கம் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெருங்களத்தூர் பேரூராட்சி தலைவர் சேகர், மதுரைப்பாக்கம் ஊராட்சி தலைவர் அமுதா வேல்முருகன், அகரம்தென் ஊராட்சி துணைத்தலைவர் ஜெகதீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பம்மல், அனகாபுத்தூர் பகுதியிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/24/2012 3:29:53 PM
-Updated 10/24/2012 3:29:43 PM
-Updated 10/24/2012 3:29:28 PM
-Updated 10/24/2012 3:29:15 PM
-Updated 10/24/2012 3:08:18 PM
-Updated 10/24/2012 3:08:08 PM
-Updated 10/24/2012 3:07:57 PM
-Updated 10/24/2012 3:07:46 PM
-Updated 10/24/2012 3:07:36 PM
-Updated 10/24/2012 3:07:27 PM
-Updated 10/24/2012 3:07:16 PM
-Updated 10/24/2012 2:52:28 PM
-Updated 10/24/2012 12:50:28 PM
-Updated 10/24/2012 12:50:18 PM
-Updated 10/24/2012 12:50:07 PM