சென்னை மாநகராட்சியை கண்டித்து அம்பத்தூரில் திமுக ஆர்ப்பாட்டம்
ஆவடி: தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து அம்பத்தூர் நகர திமுக சார்பில் இன்று காலை உழவர் சந்தை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் தலைமை தாங்கினார். நகர செயலாளரும் 7வது மண்டல குழு தலைவருமான ஜோசப் சாமுவேல் வரவேற்று பேசினார். சென்னை மாநகராட்சி சாலைகளை சரிப்படுத்தவேண்டும். புறநகரில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். குப்பைகளை அகற்ற வேண்டும்.
டெங்கு உள்ளிட்ட காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோஷங்கள் போட்டனர். ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் கி.வேணு, இ.ஏ.பி.சிவாஜி, முன்னாள் எம்பி ஆ.கிருஷ்ணசாமி, முன்னாள் எம்எல்ஏ ப.ரங்கநாதன், மாவட்ட நிர்வாகிகள் மா.துரைசாமி, கே.நீலகண்டன், திவ.விசுவ நாதன் மற்றும் கவுன்சிலர்கள் கணபதி, ரவி, ஆன்ட்ரூஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/24/2012 3:29:53 PM
-Updated 10/24/2012 3:29:43 PM
-Updated 10/24/2012 3:29:28 PM
-Updated 10/24/2012 3:29:15 PM
-Updated 10/24/2012 3:08:18 PM
-Updated 10/24/2012 3:08:08 PM
-Updated 10/24/2012 3:07:57 PM
-Updated 10/24/2012 3:07:46 PM
-Updated 10/24/2012 3:07:36 PM
-Updated 10/24/2012 3:07:27 PM
-Updated 10/24/2012 3:07:16 PM
-Updated 10/24/2012 2:52:28 PM
-Updated 10/24/2012 12:50:28 PM
-Updated 10/24/2012 12:50:18 PM
-Updated 10/24/2012 12:50:07 PM