டெங்கு காய்ச்சல் வார்டில் 15 பேருக்கு தீவிர சிகிச்சை
தண்டையார்பேட்டை: ஸ்டான்லி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற 19 பேர் வீடு திரும்பினர். தற்போது தனி வார்டில் 15 பேர் தீவிர சிகிச்சை பெறுகின்றனர். சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் காய்ச்சல் என்றதும் உடனே மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்கின்றனர். அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தீவிர சிகிச்சைக்கு பின்னர் சரவணன் (12), கார்த்திக் (13), விஜய் (13), சங்கர் (16), பாலகிருஷ்ணன் (18), சேட் (28) சேக் பசுல்லா (6) ஆகிய 7 பேர் இரண்டு தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினர். இளவரசி, அஸ்லாம், அப்துல், நிவேதா, இசக்கி, ராம், வர்ஷினி, நவீன், பிரகாஷ், முகமது அலி, மகாலட்சுமி, டில்லிராணி ஆகிய 12 பேர் நேற்று வீடு திரும்பினர். அங்கு ஏற்கனவே காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றவர்களின் ரத்தத்தை பரிசோதித்து பார்த்ததில், கஜேந்திரன் (12), சேகர் (25), வீரராகவன் (15), ஞானசேகர் (23), சங்கர் கணேஷ் (20), பொற்கொடி (18), பாண்டிமீனா (32), பக்தவச்சலம் (20) ஆகிய 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது உறுதியானது. தற்போது மொத்தம் 15 பேர் டெங்கு காய்ச்சலுக்காக தனி வார்டில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/21/2012 2:13:00 PM
-Updated 10/21/2012 2:12:11 PM
-Updated 10/21/2012 2:11:31 PM
-Updated 10/21/2012 2:07:11 PM
-Updated 10/21/2012 2:06:54 PM
-Updated 10/21/2012 2:06:16 PM
-Updated 10/21/2012 1:52:01 PM
-Updated 10/21/2012 1:36:14 PM
-Updated 10/21/2012 1:35:49 PM
-Updated 10/21/2012 1:35:14 PM
-Updated 10/21/2012 1:33:49 PM
-Updated 10/20/2012 1:54:31 PM
-Updated 10/20/2012 1:54:13 PM
-Updated 10/20/2012 1:54:02 PM
-Updated 10/20/2012 1:53:47 PM