பள்ளிப்பட்டு பகுதியில் நெடுஞ்சாலையில் மரம் விழுந்ததால் 12 மணி நேரம் போக்குவரத்து நெரிசல்
பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு பகுதியில் நேற்று முதல் விடிய, விடிய கனமழை பெய்தது. இதனால் நெடுஞ்சாலையில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததால் 12 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதிகளில் நேற்று காலையில் இருந்து நல்ல மழை பெய்து வருகிறது. கிராமத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு தண்ணீர் அதிகரித்து உள்ளது. பொதட்டூர்பேட்டையில் இருந்து அத்திமாஞ்சேரிபேட்டை வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலைத்துறையில் நேற்று இரவு பெரிய புளியமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் கிடைத்து இன்று காலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரி சுகுமார் தலைமையில், சாலை ஆய்வாளர் பாண்டுரங்கன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சாலை தொழிலாளர்கள் மூலம் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் சுமார் 12 மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிப்பட்டனர். இதுபோல், மழை காரணமாக பாவு காய்ச்ச முடியாமலும் பசை போட முடியாமலும் விசைத்தறி நெசவாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் லுங்கி, டவல், சேலைகள் தயாரிப்பு பணிகள் தொய்வு ஏற்பட்டது. மழை தொடர்ந்தால் தீபாவளிக்கு துணி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/21/2012 2:13:00 PM
-Updated 10/21/2012 2:12:11 PM
-Updated 10/21/2012 2:11:31 PM
-Updated 10/21/2012 2:07:11 PM
-Updated 10/21/2012 2:06:54 PM
-Updated 10/21/2012 2:06:16 PM
-Updated 10/21/2012 1:52:01 PM
-Updated 10/21/2012 1:36:14 PM
-Updated 10/21/2012 1:35:49 PM
-Updated 10/21/2012 1:35:14 PM
-Updated 10/21/2012 1:33:49 PM
-Updated 10/20/2012 1:54:51 PM
-Updated 10/20/2012 1:54:13 PM
-Updated 10/20/2012 1:54:02 PM
-Updated 10/20/2012 1:53:47 PM