தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் குடும்ப தகராறில் மனைவி மீது கெரசின் ஊற்றி தீ வைத்த கணவனை போலீசார் தேடுகின்றனர். தண்டையார்பேட்டை வினோபா நகரை சேர்ந்தவர் லோகு (42). கூலி தொழிலாளி. இவரது மனைவி ராணி (38). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்தது. நேற்று மாலை இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து ராணி அலறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்தனர்.
உடலில் தீப்பிடித்த நிலையில் வலி தாளாமல் ராணி அலறி கொண்டு இருந்தார். தன் மீது கெரசின் ஊற்றி கணவர் எரித்து கொல்ல முயன்றதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறினார். உடனே பொதுமக்கள் தீயை அணைத்து ராணியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றிய புகாரின் பேரில் ஆர்.கே.நகர் இன்ஸ்பெக்டர் அருள்முருகன் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான லோகுவை தேடுகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/21/2012 2:13:00 PM
-Updated 10/21/2012 2:12:11 PM
-Updated 10/21/2012 2:11:31 PM
-Updated 10/21/2012 2:07:11 PM
-Updated 10/21/2012 2:06:54 PM
-Updated 10/21/2012 2:06:16 PM
-Updated 10/21/2012 1:52:01 PM
-Updated 10/21/2012 1:36:14 PM
-Updated 10/21/2012 1:35:49 PM
-Updated 10/21/2012 1:35:14 PM
-Updated 10/21/2012 1:33:49 PM
-Updated 10/20/2012 1:54:51 PM
-Updated 10/20/2012 1:54:31 PM
-Updated 10/20/2012 1:54:13 PM
-Updated 10/20/2012 1:54:02 PM