2012
20
Oct
டீசல் விலை உயர்வை கண்டித்து ஸ்டிரைக் : மண் அள்ளும் இயந்திரங்கள் ஒரு வாரம் இயங்காது


சென்னை: தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திரம் உரிமையாளர்கள் நலச் சங்கத் தலைவர் கத்திப்பாரா ஜனார்த்தனன் இன்று சென்னையில் அளித்த பேட்டி: டீசல் மற்றும் இயந்திர உதிரி பாகங்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. வாகனங்களுக்கான கடன் வட்டியை நிதி நிறுவனங்கள் கடுமையாக உயர்த்தியுள்ளன. இவற்றை கண்டித்து வரும் நவம்பர் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை ஸ்டிரைக் செய்ய முடிவு செய்துள்ளோம்.

இதில் சங்கத்தில் உள்ள 6 ஆயிரம் மண் அள்ளும் இயந்திரங்கள் பங்கேற்கும். சங்கத்தை சார்ந்துள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகளும் ஓடாது. இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கட்டுமான பணிகள் பெரிதும் பாதிக்கும். குறிப்பாக மெட்ரோ ரயில் பணியும் பாதிக்கும். டீசல் மற்றும் வாகன உதிரி பாகங்களின் விலை உயர்வால் 15 சதவீதம் கட்டண உயர்வு செய்துள்ளோம். இதை நிறுவனங்கள் ஏற்காவிட்டால் எங்களின் போராட்டம் மேலும் தொடரும். இவ்வாறு கத்திப்பாரா ஜனார்த்தனன் கூறினார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Navratri Festival 2012, Navratri, Navratri 2012, Navratri Festival in india