2012
18
Oct
மத்திய பிரதேசம் சட்டீஸ்கரில் நிலநடுக்கம்


ஜபல்பூர்: மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் எல்லை மாவட்டங்களில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5 புள்ளிகளாக பதிவானது. ஜபல்பூரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. சட்டீஸ்கரின் சர்குஜா டிவிஷனிலும், மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த பகுதிகளில் வீடுகள் லேசாக குலுங்கின. சுமார் 30 வினாடிகள் நிலநடுக்கம் நீடித்தது. ஒரு சில இடங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Navratri Festival 2012, Navratri, Navratri 2012, Navratri Festival in india