2012
14
Oct
முதியோர் உதவி தொகை மோசடி 20 பேர் கும்பலை பிடிக்க தீவிரம்


பள்ளிபாளையம்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவர் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஜெகநாதனிடம் கொடுத்த புகாரில், முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவு இருந்தும் அதிகாரிகள் தனக்கு முதியோர் உதவித்தொகை அனுப்புவதில்லை என்றார். இது குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. குமாரபாளையத்தை சேர்ந்த சுப்ரமணி என்பவர் முதியோர் உதவித்தொகை வாங்கித் தருவதாக கூறி மாதேஸ்வரனிடம் ரூ.5,000 கமிஷன் வாங்கியுள்ளார். அதன் பின் அவர் மாதேஸ்வரனிடம் அரசு முத்திரை மற்றும் தாசில்தார் கையெழுத்துடன் கூடிய போலி உத்தரவை வழங்கி உள்ளார். 628 பேருக்கு சுப்ரமணி போலி உத்தரவு கடிதம் வாங்கி கொடுத்துள்ளார். அவரிடம் இருந்து 197 போலி உத்தரவு கடிதங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இதற்கு உடந்தையாக இருந்த அனுசுயா என்ற பெண் தலைமறைவாகி விட்டார். இதில் 19 பேர் புரோக்கர்களாக செயல்பட்டுள்ளனர்.  இது குறித்து நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து அனுசுயா உள்பட 20 பேரை தேடி வருகின்றனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Navratri Festival 2012, Navratri, Navratri 2012, Navratri Festival in india