2012
14
Oct
கூடங்குளம் மின்சாரம் தமிழகத்துக்கு பெரும்பகுதி கிடைக்க பிரதமரிடம் வலியுறுத்தல்


மீனம்பாக்கம்: மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி டெல்லியில் இருந்து விமானத்தில் இன்று காலை சென்னை வந்தார். விமானநிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: காவிரி பிரச்னையில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்படுகிறது. பிரதமர் தலைமையில் நடந்த காவிரி நதிநீர்ஆணைய கூட்டம் தமிழகத்துக்கு தண்ணீர்விட உத்தரவிட்டது. முதலில் மறுத்த கர்நாடக அரசு பின், தண்ணீர் திறந்துவிட்டது. திடீரென தண்ணீரை நிறுத்திவிட்டனர். உச்சநீதிமன்றத்துக்கு போன கர்நாடக அரசுக்கு சாதகமாக எதுவும் நடக்கவில்லை. எனவே, மீண்டும் தண்ணீர் திறந்துவிட வேண்டிய நிலையில் அவர்கள் உள்ளனர். மத்திய அமைச்சர்கள் கிருஷ்ணா, வீரப்ப மொய்லி ஆகியோர் கர்நாடகாவுக்காக பேசி வருவது அவர்கள் சார்ந்துள்ள மாநிலம் என்பதால்தான். அவர்கள் பிரதமரை சந்தித்து தண்ணீரை திறந்துவிடுவதை நிறுத்தும்படி வலியுறுத்தினர். ஆனால் அதை பிரதமர் நிராகரித்துவிட்டார். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் யுரேனியம் நிரப்பும் பணி முடிந்துவிட்டது. அடுத்தகட்டமாக சோதனை ஓட்டம் நடந்துகொண்டு இருக்கிறது. அணுசக்தி கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் தற்போது கூடங்குளம் அணு உலையின் செயல்பாடுகள் பற்றி இறுதிகட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ளது. இறுதிகட்ட அறிக்கை கிடைத்ததும் கூடங்குளம் அணு உலையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் பணி தொடங்கும். தமிழகத்தில் தற்போது மிக கடுமையான மின்வெட்டு நிலவுகிறது. எனவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் பெரும் பகுதியை தமிழகத்துக்கு அளிக்கவேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Navratri Festival 2012, Navratri, Navratri 2012, Navratri Festival in india