செங்குன்றம் பகுதியில் இன்று காலை சூறை காற்றுடன் பலத்த மழை 50 வீட்டில் டிவிகள் வெடித்தது
புழல்: செங்குன்றம் பகுதியில் இன்று காலை சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. திடீரென உயரழுத்த மின்சாரம் சப்ளை ஆனதால் ஐம்பதுக்கு மேற்பட்ட வீடுகளில் டிவி, லேப்டாப் வெடித்து சிதறியது. சென்னை செங்குன்றம் அருகே அலமாதி ஊராட்சியில் அடங்கிய எடப்பாளையம், அண்ணா தெரு, விவேகானந்தர் தெரு, பெரியார் தெரு பகுதியில் இன்று காலை இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மரக் கிளைகள் உடைந்து மின்கம்பி மீது விழுந்தது. திடீரென உயரழுத்த மின்சாரம் வந்ததால் இந்த பகுதியில் உள்ள சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட வீடுகளில் உள்ள டிவிகள், மின் விசிறிகள், லேப்டாப் வெடித்து சிதறியது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் பயத்தில் வெளியே ஓடி வந்துவிட்டனர். தெருக்களில் மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும், மின்வாரிய அதிகாரிகளும் ஊழியர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. மின் கம்பி மீது விழுந்துகிடந்த மரக்கிளைகளை ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். சோழவரம் போலீசார் பாதுகாப்புக்கு வந்திருந்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/17/2012 12:10:33 PM
-Updated 10/17/2012 11:45:45 AM
-Updated 10/17/2012 11:41:56 AM
-Updated 10/17/2012 11:36:55 AM
-Updated 10/17/2012 11:06:27 AM
-Updated 10/17/2012 10:55:02 AM
-Updated 10/16/2012 5:45:23 PM
-Updated 10/16/2012 4:40:49 PM
-Updated 10/16/2012 4:40:33 PM
-Updated 10/16/2012 4:40:16 PM
-Updated 10/16/2012 4:39:58 PM
-Updated 10/16/2012 4:39:36 PM
-Updated 10/16/2012 4:39:09 PM
-Updated 10/16/2012 4:00:52 PM
-Updated 10/16/2012 3:48:15 PM