அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவிக்க முயற்சி: ஆந்திராவை சேர்ந்த 13 பேர் சிக்கினர்
நெல்லை: கூடங்குளம் அணு மின்நிலைய எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக இடிந்தகரைக்கு செல்ல முயன்ற தெலங்கானா பகுதியை சேர்ந்த 13 பேரை ராதாபுரத்தில் போலீசார் பிடித்தனர். அவர்கள் நக்சல்களா என விசாரணை நடத்தி வருகின்றனர். கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் ராதாபுரம் பகுதியில் இன்று காலை ஆந்திராவை சேர்ந்த சிலர் நடமாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு வள்ளியூர் டிஎஸ்பி ஸ்டான்லி ஜோன்ஸ், ராதாபுரம் இன்ஸ்பெக்டர் சின்னசாமி, கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ராஜபால் மற்றும் போலீசார் சென்றனர். அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த 13 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்ததால் ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், அவர்கள் ஆந்திர மாநிலம் தெலங்கானா பகுதியை சேர்ந்த நல்லம்ம நாயுடு, ராதாகிருஷ்ணன் ரெட்டி உள்பட 13 பேர் என்பது தெரியவந்தது. இவர்கள் ஒரு அமைப்பை நடத்தி வருவதும், கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களுக்கு அந்த அமைப்பின் முழு ஆதரவை தெரிவிப்பதற்காக ராதாபுரம் வழியாக இடிந்தகரை செல்ல முயன்றதும் தெரியவந்தது. பிடிபட்டவர்கள் ஆந்திராவைச் சேர்ந்த நக்சல்களா என்ற கோணத் தில் டிஐஜி சுமித்சரண், எஸ்பி விஜயேந்திரபிதரி மற்றும் க்யூ பிரிவு உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/13/2012 1:12:44 PM
-Updated 10/13/2012 1:07:37 PM
-Updated 10/13/2012 1:07:02 PM
-Updated 10/13/2012 1:03:58 PM
-Updated 10/13/2012 12:37:18 PM
-Updated 10/12/2025 3:42:13 PM
-Updated 10/12/2025 3:39:16 PM
-Updated 10/12/2025 3:38:59 PM
-Updated 10/12/2025 3:38:43 PM
-Updated 10/12/2025 3:33:10 PM
-Updated 10/12/2025 2:02:34 PM
-Updated 10/12/2025 1:07:11 PM
-Updated 10/12/2025 12:48:48 PM
-Updated 10/12/2025 12:48:19 PM
-Updated 10/12/2025 12:47:57 PM