2012
12
Oct
தி.நகரில் இளம்பெண் படுகொலை கணவர், பத்திரிகை ஓனரிடம் போலீஸ் தீவிர விசாரணை


சென்னை: தி.நகரில் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர், இலவச வார பத்திரிகை உரிமையாளரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் பெண்ணின் செல்போன் மூலம் துப்பு துலக்கும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. சென்னை தி.நகர் முத்துரங்கன் சாலை பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (32). மனைவி ஜோதிலட்சுமி (27). இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. தி.நகரில் உள்ள துணிக்கடையில் முத்துப்பாண்டி வேலை செய்கிறார். தி.நகர் வரதராஜன் தெருவில் உள்ள இலவச வார பத்திரிகை அலுவலகத்தில், 4 ஆண்டாக ஜோதிலட்சுமி கம்யூட்டர் டிசைனராக வேலை பார்த்தார். வழக்கம் போல நேற்று பணிக்கு சென்றிருந்தார். மாலை 6.30 மணிக்கு பத்திரிகை உரிமையாளர் பம்மல் ஸ்ரீகுமார் (45), அலுவலகத்துக்கு சென்றார். அங்கு வெளி பக்கமாக கதவு மூடப்பட்டிருந்தது. கதவை திறந்து உள்ளே பார்த்த போது, ஜோதிலட்சுமி கழுத்து அறுபட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ரீகுமார், உடனடியாக மாம்பலம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து சென்று உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட ஜோதிலட்சுமி கழுத்தில் கிடந்த 3 பவுன் செயின், 2 மோதிரம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தி.நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொலை தொடர்பாக விசாரணையை முடுக்கி விட்டுள்ள போலீசார் முதல் கட்டமாக ஸ்ரீகுமார், முத்துப்பாண்டி இருவரையும் தனித்தனியாக விசாரித்து வருகின்றனர். அலுவலகத்தில் 2 பேர் மட்டும் இருந்ததால் உரிமையாளருக்கும் அவருக்கும் கள்ளத் தொடர்பு ஏதேனும் இருந்திருக்குமா? இதில் ஏற்பட்ட பிரச்னையால் ஜோதிலட்சுமி கொலை செய்யப்பட்டாரா? சந்தேகத்தில் கணவனே ஜோதிலட்சுமியை கொன்றாரா? நகையை கொள்ளை அடிக்கும் முயற்சியில் கொலை நடந்ததா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மேலும் ஜோதிலட்சுமியை செல்போனில் கடைசியாக தொடர்பு கொண்ட 20 பேரிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதனால் விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
T20 World Cup 2012,ICC World Cup Twenty20 2012,Twenty20 2012,Twenty20 2012 Schedule,Twenty20 2012 Venues,Twenty20,Twenty20 in Tamil