2012
09
Oct
முதல்வர் ஜெயலலிதா வந்த காரை செல்போனில் படம் பிடித்த மாணவர்கள் கல்லூரியில் போலீஸ் விசாரணை


துரைப்பாக்கம்: முதல்வர் ஜெயலலிதா வந்த காரை செல்போனில் மாணவர்கள் படம் பிடித்ததால், கல்லூரிக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். முதல்வர் ஜெயலலிதா கடந்த சில நாட்களாக சிறுதாவூர் பங்களாவில் தங்கியுள்ளார். சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சிறுதாவூருக்கு சென்று வருவது வழக்கம். இன்று காலை, சிறுதாவூரில் இருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டார். கானத்தூர் தனியார் கல்லூரி அருகே வந்தபோது கல்லூரி வாசலில் நின்று கொண்டிருந்த 5 மாணவர்கள், தங்களது செல்போனில் ஜெயலலிதா வந்த காரை படம் பிடித்தனர். இதை ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள் பார்த்து விட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். உடனே அங்கிருந்து கானத்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு மாணவர்கள் இல்லாததால் கல்லூரிக்குசென்று போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் படம் பிடித்தவர்கள் விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
T20 World Cup 2012,ICC World Cup Twenty20 2012,Twenty20 2012,Twenty20 2012 Schedule,Twenty20 2012 Venues,Twenty20,Twenty20 in Tamil