ஸ்டான்லி ஆஸ்பத்திரி வாசலில் டாக்டரின் கார் ஏறியதில் ரோட்டோரம் தூங்கியவர் பலி
தண்டையார்பேட்டை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனை கேட்டிற்கு வெளியே பழைய ஆட்டு தொட்டி சாலையில் 32 வயதுடைய வாலிபர் தூங்கிக்கொண்டிருந்தார். தெருவிளக்கு இல்லாததால் சாலையில் இருள்சூழ்ந்து காணப்பட்டது. இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து நள்ளிரவு வெளியே வந்த கார், வாலிபர் மீது ஏறி விட்டு வேகமாக சென்றது. கார் டயர் ஏறியதில் படுகாயம் அடைந்த வாலிபர் உயிருக்கு போராடினார். தகவல் அறிந்ததும் காசிமேடு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது வாலிபர் மூச்சின்றி கிடந்தார். மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை செய்த டாக்டர் வாலிபர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இறந்தவர் பெயர், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த கார் நீல நிறத்தில் இருந்தது. காரில் டாக்டர் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. தெரு விளக்கு சரியாக எரியாததால் தான் இது போன்ற விபத்து நடக்கிறது என்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/10/2025 3:16:11 PM
-Updated 10/10/2025 12:56:52 PM
-Updated 10/10/2025 12:56:38 PM
-Updated 10/10/2025 12:53:17 PM
-Updated 10/9/2025 4:30:29 PM
-Updated 10/9/2025 4:06:04 PM
-Updated 10/9/2025 4:05:19 PM
-Updated 10/9/2025 12:54:57 PM
-Updated 10/9/2025 12:54:42 PM
-Updated 10/9/2025 12:54:24 PM
-Updated 10/9/2025 12:21:23 PM
-Updated 10/9/2025 12:19:35 PM
-Updated 10/8/2025 4:03:44 PM
-Updated 10/8/2025 4:03:27 PM
-Updated 10/8/2025 3:29:51 PM