81 லட்சம் கல்வி உதவித்தொகை மோசடி: ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி வீட்டில் ரெய்டு
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் நடந்த கல்வி உதவித்தொகை மோசடி விவகாரத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையில் ரூ. 81 லட்சம் மோசடி நடந்தது. இதுதொடர்பாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் 77 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மோசடிக்கு துணை போன மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ராமச்சந்திரன், சூப்பிரண்டு உமாபதி ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இம்மோசடி விவகாரம் தொடர்பாக 4 தலைமை ஆசிரியர்கள் மீது கிரிமினல் வழக்கும் போலீசில் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சஸ்பெண்டான மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ராமச்சந்திரனின் வீட்டில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல்மோகனூர் சாலையில் கலைவாணிநகரில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் பூபதிராஜன் தலைமையிலான குழுவினர் காலை 8 மணிக்கு சென்றனர். அங்கு கல்வி உதவித்தொகை மோசடி தொடர்பாக ஆவணங்கள் ஏதும் உள்ளதா? மோசடி செய்யப்பட்ட பணம் எம்மாதிரியான சொத்துகளாக முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் ராமச்சந்திரனிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/11/2025 4:40:33 PM
-Updated 10/11/2025 4:40:21 PM
-Updated 10/11/2025 4:40:07 PM
-Updated 10/11/2025 4:39:55 PM
-Updated 10/11/2025 4:39:40 PM
-Updated 10/11/2025 4:39:26 PM
-Updated 10/11/2025 4:39:09 PM
-Updated 10/11/2025 1:15:53 PM
-Updated 10/11/2025 11:52:50 AM
-Updated 10/10/2025 3:16:11 PM
-Updated 10/10/2025 12:56:52 PM
-Updated 10/10/2025 12:56:38 PM
-Updated 10/10/2025 12:53:17 PM
-Updated 10/9/2025 4:30:29 PM
-Updated 10/9/2025 4:25:12 PM