படிக்க வந்த பள்ளி மாணவியை கடத்தியதால் மனைவி தற்கொலை: மதுரை டியூஷன் ஆசிரியர் கைது
மதுரை: படிக்க வந்த மாணவியை டியூஷன் ஆசிரியர் கடத்தியதால் அவர் மனைவி தீ குளித்து தற்கொலை செய்து கொண்டார். ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். மதுரை அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் மகள் மகேஸ்வரி (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பத்தாம் வகுப்பு மாணவி. இதே பகுதியில் ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி கலா சேர்ந்து டியூஷன் சென்டர் நடத்தி வருகின்றனர். இங்கு மாணவி மகேஸ்வரி படித்து வந்தார். இதில் மாணவி மகேஸ்வரிக்கும், ஆசிரியர் ராஜ்குமாருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி மாணவியை ராஜ்குமார் கடத்தி சென்றார். இது தொடர்பாக ஜெயச்சந்திரன் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் ராஜ்குமார் மனைவி கலாவிடம் விசாரணை நடத்தினர். நேற்று விசாரணை முடிந்து கலாவை வீட்டுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். கணவரால் தான் அவமானம்பட்டுவிட்டதாக மனவேதனை அடைந்த கலா வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார் இதில் உடல் கருதி பலியானார். இச்சம்பவம் கேள்விப்பட்டு ராஜ்குமார், மாணவி மகேஸ்வரியும் சேர்ந்து ஜெய்ஹிந்துபுரம் போலீசில் சரணடைந்தனர். மாணவியை கடத்தியது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/11/2025 1:15:53 PM
-Updated 10/11/2025 11:52:50 AM
-Updated 10/10/2025 3:16:11 PM
-Updated 10/10/2025 12:56:52 PM
-Updated 10/10/2025 12:56:38 PM
-Updated 10/10/2025 12:53:17 PM
-Updated 10/9/2025 4:30:29 PM
-Updated 10/9/2025 4:25:12 PM
-Updated 10/9/2025 4:06:04 PM
-Updated 10/9/2025 12:54:57 PM
-Updated 10/9/2025 12:54:42 PM
-Updated 10/9/2025 12:54:24 PM
-Updated 10/9/2025 12:21:23 PM
-Updated 10/9/2025 12:19:35 PM
-Updated 10/8/2025 4:03:44 PM