ஆரணி விவசாயிகளுக்கு குப்பையை மறுசுழற்சி மூலம் உரம் தயாரிக்க ஆலோசனை
கும்மிடிப்பூண்டி: ஆரணியில் தமிழ்நாடு நீர்வள நிலவள, ஆரணி ஆற்று நீரை பயன்படுத்துவோர் சங்கம் மற்றும் விவசாய மகளிர் குழுவினருக்கான ஒருநாள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடந்தது. இதில் சுற்றுச்சூழல் இயக்குனர் பிரித்திவிராஜ், வேலூர் மாவட்ட எக்ஸ்னோரா தலைவர் தொல்காப்பியன், இயற்கை வேளாண்மை அமைப்பு தலைவர் புருசோத்தமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு, குப்பை சேகரித்து மறு சுழற்சி மூலம் உரம் தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர். மேலும் நீர்வள மேலாண்மை, இயற்கை வள மேலாண்மை, கால நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், குறைந்த அளவில் அதிக மகசூல் பெறுவது, செம்மை நெல் சாகுபடி குறித்து விளக்கினர். ஆரணி நகர திமுக செயலாளர் கண்ணதாசன், முன்னாள் கவுன்சிலர் கரிகாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/11/2025 4:40:33 PM
-Updated 10/11/2025 4:40:21 PM
-Updated 10/11/2025 4:40:07 PM
-Updated 10/11/2025 4:39:55 PM
-Updated 10/11/2025 4:39:40 PM
-Updated 10/11/2025 4:39:26 PM
-Updated 10/11/2025 4:39:09 PM
-Updated 10/11/2025 1:15:53 PM
-Updated 10/11/2025 11:52:50 AM
-Updated 10/10/2025 3:16:11 PM
-Updated 10/10/2025 12:56:52 PM
-Updated 10/10/2025 12:56:38 PM
-Updated 10/10/2025 12:53:17 PM
-Updated 10/9/2025 4:30:29 PM
-Updated 10/9/2025 4:25:12 PM