மாணவர் சேர்க்கை முறைகேடு : அண்ணா பல்கலைக்கு ஐகோர்ட் புது உத்தரவு
சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் பி.ஆர்க் என்ற கட்டிடக் கலை படிப்பில் இந்த ஆண்டு 80 மாணவர்களை சேர்த்துள்ளது. இதில் 20 மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி தி.நகர் மாணவி வந்தனா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை நீதிபதி ராமசுப்பிரமணியம் விசாரித்து, 20 மாணவர் சேர்க்கை பட்டியலை தாக்கல் செய்யும்படி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதி ராமசுப்பிரமணியம் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் கூடுதல் அட்வகேட் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, 20 மாணவர் சேர்க்கை பட்டியலை தாக்கல் செய்தார். இந்த பட்டியலை பரிசீலித்த நீதிபதி ராமசுப்பிரமணியம், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி 15 இடங்களைதான் நிரப்பி உள்ளீர்கள். மீதமுள்ள 5 இடங்களை எப்படி நிரப்பினீர்கள் என்பதற்கு வரும் வெள்ளிக்கிழமை விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையேல் வழக்கு தொடர்ந்த மாணவிக்கு ஒரு இடம் ஒதுக்க வேண்டி இருக்கும் என்றார். மாணவி சார்பில் மூத்த வக்கீல் கே.துரைசாமி ஆஜரானார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/1/2025 5:15:25 PM
-Updated 9/30/2012 4:40:04 PM
-Updated 9/30/2012 4:39:47 PM
-Updated 9/30/2012 4:08:38 PM
-Updated 9/30/2012 1:37:33 PM
-Updated 9/30/2012 1:37:17 PM
-Updated 9/30/2012 1:34:43 PM
-Updated 9/30/2012 1:27:20 PM
-Updated 9/30/2012 1:23:44 PM
-Updated 9/30/2012 1:23:29 PM
-Updated 9/30/2012 1:21:26 PM
-Updated 9/30/2012 1:16:53 PM
-Updated 9/30/2012 1:14:38 PM
-Updated 9/30/2012 12:51:55 PM
-Updated 9/30/2012 12:51:38 PM