கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே 500 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவன்
தேன்கனிக்கோட்டை: விளையாடிக் கொண்டிருந்தபோது 500 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் 3 வயது சிறுவன் தவறி விழுந்தான். அவனை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட் டம் தளியை அடுத்த மலை கிராமமான குங்களத்தூரைச் சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கு அப்பகுதியில் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அங்கு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடந்தது. 520 அடி ஆழத்திற்கு போர் துளை போட்டும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் ஆழ்துளை கிணற்றினை மூடாமல் அப்படியே விட்டுச் சென்று விட்டனர். இந்நிலையில் ஆனந்த், மனைவி பத்மா, குழந்தைகள் பூஜா (4), குணா (3) ஆகியோருடன் இன்று காலை நிலத்திற்கு சென்றார். அங்கு பத்மா துணி துவைத்துக்கொண்டிருந்த நிலையில், குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மூடாமல் கிடந்த ஆழ்துளை கிணற்றில் குணா தவறி விழுந்தான். இதைபார்த்த பூஜா கூச்சல்போட்டதை கேட்டு அனைவரும் அங்கு திரண்டனர். தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மலைப்பகுதியாக உள்ளதால் வாகனங்களை அருகில் கொண்டு செல்ல முடியவில்லை. குழந்தை குணா, ஆழ்துளை கிணற்றில் 20 அடி ஆழத்தில் சிக்கியிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆழ்துளை கிணற்றின் அருகில் பள்ளம் தோண்டி மீட்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/1/2025 5:15:25 PM
-Updated 10/1/2025 5:13:48 PM
-Updated 9/30/2012 4:39:47 PM
-Updated 9/30/2012 4:08:38 PM
-Updated 9/30/2012 1:37:33 PM
-Updated 9/30/2012 1:37:17 PM
-Updated 9/30/2012 1:34:43 PM
-Updated 9/30/2012 1:27:20 PM
-Updated 9/30/2012 1:23:44 PM
-Updated 9/30/2012 1:23:29 PM
-Updated 9/30/2012 1:21:26 PM
-Updated 9/30/2012 1:16:53 PM
-Updated 9/30/2012 1:14:38 PM
-Updated 9/30/2012 12:51:55 PM
-Updated 9/30/2012 12:51:38 PM