சென்னை: பார்த்திபன் நடித்த ‘புதிய பாதை, ‘பொண்டாட்டி தேவை, வசந்த் இயக்கிய ‘கேளடி கண்மணி மற்றும் சோ நடித்து இயக்கிய ‘மிஸ்டர் சம்பத், ‘யாருக்கும் வெட்கமில்லை போன்ற படங்களை தயாரித்தவர் விவேக் சித்ரா சுந்தரம் (78). இவர் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வீட்டில் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு இயக்குனர்கள் கே.பாலசந்தர், வசந்த், பார்த்திபன், சோ உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். சுந்தரம் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் இன்று பிற்பகல் தகனம் செய்யப்படுகிறது. இவருக்கு பானுமதி என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/1/2025 5:15:25 PM
-Updated 10/1/2025 5:13:48 PM
-Updated 9/30/2012 4:40:04 PM
-Updated 9/30/2012 4:39:47 PM
-Updated 9/30/2012 1:37:33 PM
-Updated 9/30/2012 1:37:17 PM
-Updated 9/30/2012 1:34:43 PM
-Updated 9/30/2012 1:27:20 PM
-Updated 9/30/2012 1:23:44 PM
-Updated 9/30/2012 1:23:29 PM
-Updated 9/30/2012 1:21:26 PM
-Updated 9/30/2012 1:16:53 PM
-Updated 9/30/2012 1:14:38 PM
-Updated 9/30/2012 12:51:55 PM
-Updated 9/30/2012 12:51:38 PM