நண்பர்களுடன் குளித்த போது ஏரியில் மூழ்கி வாலிபர் சாவு
ஆவடி: நண்பர்களுடன் குளித்தபோது ஏரியில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார். ஆவடி அருகே நடந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பூந்தமல்லி அருகே குமணன்சாவடி இந்திரா ராணி நகரை சேர்ந்தவர் கந்தன் மகன் கார்த்திக் கணேஷ் (19). கார் கம்பெனி ஒப்பந்த ஊழியர். நேற்று மாலை நண்பர்கள் 3 பேருடன் ஆவடி அருகே அயப்பாக்கம் ஏரிக்கு குளிக்க சென்றார். அனைவரும் ஏரியில் குளித்து கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்றார் கார்த்திக். அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். சக நண்பர்களால், அவரை காப்பாற்ற முடியவில்லை. கார்த்திக்கின் அப்பாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த அவர், திருமுல்லைவாயல் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு படையினரும் வரவழைக்கப்பட்டனர். ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு, கார்த்திக்கின் சடலம் இன்று மீட்கப்பட்டது. பின்னர், உடல், பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour">
-Updated 9/22/2012 2:22:07 PM
-Updated 9/22/2012 12:46:41 PM
-Updated 9/22/2012 12:33:04 PM
-Updated 9/22/2012 12:32:48 PM
-Updated 9/21/2012 3:08:14 PM
-Updated 9/21/2012 12:45:43 PM
-Updated 9/21/2012 12:45:27 PM
-Updated 9/20/2012 3:18:19 PM
-Updated 9/20/2012 2:48:51 PM
-Updated 9/20/2012 2:10:46 PM
-Updated 9/20/2012 2:10:32 PM
-Updated 9/20/2012 2:10:10 PM
-Updated 9/19/2012 3:32:38 PM
-Updated 9/17/2012 4:40:37 PM
-Updated 9/17/2012 3:43:56 PM