திருமணம் செய்வதாக ஏமாற்றி உல்லாசம் ஆயுதப்படை போலீஸ்காரர் மீது பெண் போலீஸ் பரபரப்பு புகார்
கிருஷ்ணகிரி: திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக ஆயுதப்படை போலீஸ்காரர் மீது பெண் போலீஸ் புகார் அளித்துள்ளார். இதுபற்றி வழக்குப்பதிவு செய்து மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படை போலீஸ் 3ம் பிரிவில் பணியாற்றி வருபவர் ராஜேஸ்வரி (38). இதே போல் தர்மபுரி ஆயுதப்படை போலீஸ் பிரிவில் பணியாற்றி வருபவர் மலர்செல்வன் (38). இவர்கள் இருவரும் கடந்த 2010ம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர். போச்சம்பள்ளியில் உள்ள 7வது பட்டாலியன் ஆயுதப்படை பிரிவில் ஒன்றாக பணியாற்றியபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், கிருஷ்ணகிரியில் ஒன்றாக பணியாற்றியபோது இருவரும் காதலிக்க தொடங்கினர். அடிக்கடி தனிமையில் சந்தித்தனர். இந்நிலையில், மலர்செல்வன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராஜேஸ்வரி புகார் அளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: திருமணம் செய்துகொள்வதாக மலர்செல்வன் ஆசை வார்த்தை கூறினார். அதனை நம்பி கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆசைக்கு இணங்கி வந்தேன். பல இடங்களில் இருந்து என்னை பெண் பார்க்க வந்தபோது, தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறி மலர்செல்வன் தடுத்தார். இந்நிலையில், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது தெரியவந்தது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது அடித்து உதைத்தார். மேலும் என்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். தொடர்ந்து வற்புறுத்தியபோது, கழுத்தை நெரித்து கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி வருகிறார். இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார். இதுபற்றி எஸ்ஐ கலைவாணி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour">
-Updated 9/23/2012 2:55:24 PM
-Updated 9/23/2012 2:55:07 PM
-Updated 9/23/2012 1:30:25 PM
-Updated 9/23/2012 1:24:52 PM
-Updated 9/23/2012 1:22:50 PM
-Updated 9/22/2012 2:22:07 PM
-Updated 9/22/2012 12:46:41 PM
-Updated 9/22/2012 12:33:04 PM
-Updated 9/22/2012 12:32:48 PM
-Updated 9/21/2012 3:08:14 PM
-Updated 9/21/2012 12:45:43 PM
-Updated 9/21/2012 12:45:27 PM
-Updated 9/20/2012 3:18:38 PM
-Updated 9/20/2012 3:18:19 PM
-Updated 9/20/2012 2:48:51 PM