மீனம்பாக்கம்: சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த பெண், தான் அணிந்து இருந்த பர்தாவில் பதுக்கிவைத்து தங்க செயின்களை கடத்தி வந்தார். சிங்கப்பூரில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் நேற்று இரவு 11.40 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதித்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த உம்முகுல்சும் (42) என்ற பெண் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, பெண் அதிகாரிகளை வரவழைத்து அவரை சோதித்தனர். அவர் அணிந்திருந்த பர்தாவில் புத்தம் புது செயின்கள் மறைக்கப்பட்டிருந்தது. அவரை தனி அறைக்கு கொண்டு சென்று பர்தாவில் பதுக்கிவைத்து இருந்து 520 கிராம் தங்க செயின்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு 18 லட்ச ரூபாய். உம்முகுல்சும், இதற்கு முன் தங்க நகைககள் கடத்தி வந்துள்ளாரா என்று அதிகாரிகள் விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour">
-Updated 9/19/2012 3:32:38 PM
-Updated 9/17/2012 4:40:37 PM
-Updated 9/17/2012 3:43:56 PM
-Updated 9/17/2012 3:24:14 PM
-Updated 9/17/2012 1:24:59 PM
-Updated 9/10/2025 4:05:07 PM
-Updated 9/10/2025 4:02:04 PM
-Updated 9/10/2025 3:16:22 PM
-Updated 9/10/2025 3:09:52 PM
-Updated 9/10/2025 2:48:23 PM
-Updated 9/10/2025 2:48:04 PM
-Updated 9/10/2025 2:47:55 PM
-Updated 9/9/2025 3:39:18 PM
-Updated 9/9/2025 3:38:25 PM
-Updated 9/9/2025 3:36:23 PM