2012
09
Sep
காதல் தோல்வியால் விரக்தி சாப்ட்வேர் இன்ஜினியர் மாயம்


வேளச்சேரி: திருநெல்வேலியை சேர்ந்தவர் ஜான்பாஸ்கோ. இவரது மகன் கனிஸ்டஸ் ராய் (31). சென்னை சின்னமலையில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றினார். கானகம் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்களுடன் தங்கியிருந்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன் மாயமானார். இது பற்றி தரமணி காவல்நிலையத்தில் நண்பர்கள் புகார் செய்தனர். கனிஸ்டஸ் ராய்க்கு சின்ன வயதில் இருந்தே சர்க்கரை நோய் உள்ளது. சர்க்கரை அளவு அதிகரித்தது. இதனால் சிகிச்சை எடுக்க பெற்றோர் கேட்டுள்ளனர். ஆனால் சிகிச்சை எடுக்க மறுத்துவிட்டாராம். மேலும் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறியிருக்கிறார். ஆனால் அவர் காதலை ஏற்றுக்கொள்ளவில்லையாம். இதனால் ஏற்பட்ட விரக்தியில் கனிஸ்டஸ்ராய் மாயமாகிவிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சென்னை அடையாறு இந்திராநகர் கெனால் பேங்க் ரோட்டை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் விஜயகுமார் (17). காந்தி நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்தார். கடந்த 7ம் தேதி பள்ளிக்கு சென்றவர் வீட்டுக்கு வரவில்லை. புகாரின்பேரில் அடையாறு போலீசார் விசாரிக்கின்றனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour