கடையநல்லூர்: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த திருவேங்கடம் அருகே உள்ள அழகாபுரியைச் சேர்ந்தவர் சேகர் (32). இவரும், இவரது உறவினர்கள் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (40) உள்ளிட்ட 8 பேர் நேற்று மாலை காரில் குற்றாலம் புறப்பட்டனர். காரை ரமேஷ்குமார் (40) என்பவர் ஓட்டினார். குற்றாலத்தில் அருவிகளில் குளித்த அவர்கள், இன்று அதிகாலை மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். கடையநல்லூரை அடுத்த சொக்கம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று நிலைதடுமாறி ரோட்டோரத்தில் இருந்த மரத்தில் மோதி நொறுங்கியது. இதில் காரில் இருந்த சேகர், கருப்பசாமி ஆகியோர் அதே இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். மாடசாமி (22), மாரியப்பன் மகன் சேகர் (22) மற்றும் கருணாகரன் (19), வேலுசாமி (20), செல்வராஜ் (28), டிரைவர் ரமேஷ்குமார், சரவணன் (19) ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/10/2025 4:05:07 PM
-Updated 9/10/2025 4:02:04 PM
-Updated 9/10/2025 3:16:22 PM
-Updated 9/10/2025 3:09:52 PM
-Updated 9/10/2025 2:48:23 PM
-Updated 9/10/2025 2:48:04 PM
-Updated 9/10/2025 2:47:55 PM
-Updated 9/9/2025 3:39:18 PM
-Updated 9/9/2025 3:38:25 PM
-Updated 9/9/2025 3:36:23 PM
-Updated 9/9/2025 3:36:03 PM
-Updated 9/8/2025 2:38:12 PM
-Updated 9/8/2025 2:37:56 PM
-Updated 9/8/2025 2:28:47 PM
-Updated 9/8/2025 12:34:14 PM