2012
08
Sep
பட்டாசு ஆலை விபத்தில் 38 பேர் பலி அதிகாரிகள் மீது நடவடிக்கை சிவகாசி மக்கள் வலியுறுத்தல்


விருதுநகர்:  ஆண்டு தோறும் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் பட்டாசு ஆலை விபத்துகளின் போது ஏராளாமானோர் உயிர்பலியாவது தொடர்கதையாக இருந்த போதும், அரசு அதிகாரிகள் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவகாசி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் உரிமம் பெற்ற 689 பட்டாசு ஆலைகள் உள்ளன. இவை தவிர அங்கீகாரம் இன்றி குடிசை தொழில் போல் நூற்றுக்கணக்கான ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. ஏழு அறைகளை கொண்ட பட்டாசு ஆலை அமைக்க கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும். அதே போல் 13 அறைகளை கொண்ட பட்டாசு ஆலை அமைக்க சென்னையில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டு பிரிவில் அனுமதி வாங்க வேண்டும். அதற்கு மேல் உள்ள அறைகளுடன் பட்டாசு ஆலை அமைக்க வேண்டும் என்றால் நாக்பூரில் உள்ள தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையிடம் அனுமதி பெற வேண்டும்.

பட்டாசு ஆலைகளை கண்காணிக்க தனி தாசில்தார் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர், தொழிலாளர் பாதுகாப்பு அலுவலர் என ஏராளமானோர் உள்ளனர். ஆனால் வெடி விபத்து ஏற்படும் போது மட்டும் சுறுசுறுப்பு காட்டும் அதிகாரிகள் அதன் பின்னர், ஆலைகளில் நடைபெறும் விதிமீறல்களை கண்டு கொள்வதே இல்லை. இதனால் விபத்துகளையும் தடுக்க முடியவில்லை. இதற்கு சமீபத்திய உதாரணம்தான் கடந்த 5ம் தேதி முதலிப்பட்டியில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 38 பேர் பலியானது. எனவே அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து விருதுநகர் மாவட்ட சிஐடியூ செயலாளர் முத்துவேல் கூறியதாவது: பட்டாசு விபத்து நடைபெறும் போது விதிமீறல்களை கண்டு கொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விதிமுறைகளை மீறி லாப நோக்கத்தில் மட்டும் பட்டாசுகளை உற்பத்தி செய்யும் ஆலைகளை கண்காணித்து அவற்றின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் அதிகமான பட்டாசு ஆலைகள் இருப்பதால், இதற்கு தனி துறை அமைத்து பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour