2012
08
Sep
இந்தி சீரியல்களில் நடித்து வந்த டிவி நடிகை மர்மசாவு


மும்பை: பிரபல டிவி நடிகை சாலை விபத்தில் பலியானார். இது விபத்தா அல்லது கொலையா என சந்தேகம் எழுந்துள்ளது. ‘மாதா கி சௌகி’ என்ற பிரபல இந்தி சீரியலில் நடித்து வந்தவர் நடிகை நீரல் பரத்வாஜ்(19). இவர் வெள்ளிக்கிழமை காலை அந்தேரி பகுதியில் தான் தங்கியிருந்த வீட்டில் இருந்து தனது உறவினரை பார்க்கச் சென்றுள்ளார். ஜேவிபி சர்க்கிள் பகுதியில் இவர் வந்து கொண்டிருந்தபோது கார் மோதி உயிரிழந்தார். இவர் வீட்டில் இருந்து ஆட்டோவில் சென்றதாக இவரது தோழி கூறியுள்ளார். ஆனால் விபத்து நடந்த இடத்தில் ஆட்டோ எதுவும் இல்லை. எனவே இவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.  இந்த விபத்தை ஏற்படுத்திய காரை புரவேஷ் பட்கர்(25) என்பவர் ஓட்டி வந்துள்ளார். விபத்துக்கு பின் கார் தெருவிளக்குக் கம்பத்தில் மோதி நின்றது. இவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து உடனடியாக ஜாமீனில் விடுவித்தனர். இந்த விபத்து மர்மமாக உள்ளது என புகார் எழுந்துள்ளது. எனவே இது விபத்தா அல்லது கொலையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour