2012
05
Sep
மணப்பாறையில் பயங்கரம் திமுக பிரமுகரின் மாமியார் எரித்து கொலை


மணப்பாறை: மணப்பாறை திமுக பிரமுகரின் மாமியார் இன்று அதிகாலை எரித்து கொலை செய்யப்பட்டார். இவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். மணப்பாறை வேதரத்தினபுரத்தை சேர்ந்தவர் நாகராஜன், திமுக தொண்டரணி துணை அமைப்பாளர். நேற்றிரவு வீட்டின் வெளியில் நாகராஜனின் மாமியார் சரஸ்வதி (70) கட்டிலில் தூங்கி கொண்டிருந்தார். அவர் படுத்திருந்த இடத்தில் இருந்து 10 அடி தூரத்தில்  பைக் நிறுத்தப்பட்டிருந்தது. இன்று அதிகாலை 4.15 மணிக்கு பைக் தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த நாகராஜனின் மகன் ராஜ்பாபு (25) வெளியே ஓடிவந்து பைக்கில் எரிந்த தீயை அணைத்தார். அப்போது கட்டிலில் தூங்கி கொண்டிருந்த பாட்டி சரஸ்வதி கட்டிலோடு எரிந்து பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பைக் அருகே ஒரு எரிந்துபோன தீப்பந்தம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். முன்விரோதம் காரணமாக யாராவது சரஸ்வதியை எரித்து கொன்றார்களா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். நாகராஜன் வீட்டு அருகே கடைகள் உள்ளது. இதனை கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இந்த கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டும் விசாரணை நடந்து வருகிறது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour