சென்னை: சென்னை கே.கே.நகர் பஸ் டெப்போவில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 185 பஸ்கள் இயக்கப்படுகிறது. இங்கு 392 டிரைவர்களும், 397 கண்டக்டர்களும் பணியாற்றுகின்றனர். இதில் டிரைவர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை ஷிப்ட் அடிப்படையில் மாற்றப்படுவார்கள். கண்டக்டர்கள் தினமும் மாற்றப்படுவார்கள். ஆனால், தற்போது புதிதாக வந்துள்ள கிளை மேலாளர் தாமஸ் இந்த முறையை மாற்றி, டிரைவர்களை போல் 15 நாட்களுக்கு ஒரு முறை கண்டக்டர்களும் ஷிப்ட் முறையில் மாற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். கடந்த 1ம் தேதியில் இருந்து இந்த முறை அமலுக்கு வந்தது. இதற்கு கண்டக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் புதிய முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் பஸ்களை இயக்காமல் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உயர்அதிகாரிகள் வந்து சமரசம் பேசியபிறகு 10 மணிக்கு மேல் பஸ்கள் இயக்கப்பட்டது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/8/2025 12:34:14 PM
-Updated 9/8/2025 12:25:40 PM
-Updated 9/7/2025 5:27:49 PM
-Updated 9/7/2025 5:27:27 PM
-Updated 9/7/2025 5:27:12 PM
-Updated 9/7/2025 4:28:17 PM
-Updated 9/7/2025 4:27:59 PM
-Updated 9/7/2025 4:27:33 PM
-Updated 9/7/2025 4:27:18 PM
-Updated 9/7/2025 4:27:02 PM
-Updated 9/5/2025 4:02:29 PM
-Updated 9/5/2025 4:02:14 PM
-Updated 9/3/2025 4:08:23 PM
-Updated 9/3/2025 4:08:06 PM
-Updated 9/3/2025 4:07:44 PM