2 பெண் குழந்தை பெற்றவர்களுக்கு நிதியுதவி பாண்டு பத்திரம் கிடைக்காமல் 3 வருடங்களாக பெண்கள் தவிப்பு
கூடுவாஞ்சேரி: தமிழக அரசின் பாண்டு பத்திரம் கிடைக்காமல் பெண்கள் தவித்து வருகின்றனர். 2 பெண் குழந்தை பெற்றவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான பாண்டு பத்திரம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீரப்பாக்கம், நல்லம்பாக்கம், வேங்கடமங்கலம், நெடுங்குன்றம், ஊனமாஞ்சேரி, காரணை புதுச்சேரி, வண்டலூர், ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம் உள்ளிட்ட 39 ஊராட்சிகளை சேர்ந்த 700க்கு மேற்பட்ட பெண்கள் இந்த திட்டத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், 3 ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு இதுவரை வழங்கவில்லை. காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு போய் கேட்டால், காஞ்சிபுரத்தில் உள்ள சமூக நலத்துறை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டோம் என்று கூறுகிறார்களாம். அங்கு போய் கேட்டால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என அனுப்பி விடுகிறார்களாம். இதனால் பெண்கள் அழைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.
விண்ணப்பித்துள்ளவர்கள் கூறுகையில், 2 பெண் குழந்தைகள் பெற்றவர்களுக்கு அரசு சார்பில், ஒரு லட்ச ரூபாய்க்கு பாண்டு பாத்திரம் வழங்கப்படுகிறது. நாங்கள் விண்ணப்பித்து 3 வருடங்கள் ஆகியும் கிடைக்கவில்லை. வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு சென்று கேட்டால் மாவட்ட சமூக நல அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டோம். அங்கு போய் கேளுங்கள் என்கிறார்கள். அங்கு போய் கேட்டால் பிடிஓ அலுவலகம் போங்கள் என்கிறார்கள். உதவித் தொகை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். சமூக நல அலுவலர் விஜயலட்சுமி கூறுகையில், உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த மனுக்களை காஞ்சிபுரம் மாவட்ட சமூக நல அலுவலகத்துக்கு பரிந்துரை செய்து அனுப்பப்படும். அங்கு பாண்டு பத்திரம் தயாரித்து தலைமைச் செயலகத்தில் சமூக நலத் துறை இயக்குனருக்கு அனுப்புவார்கள். அங்கிருந்து மாவட்ட வாரியாக பிரித்து அனுப்புவார்கள். இதனால்தான் தாமதம் ஏற்படுகிறது. காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் 2009ம் ஆண்டு வரை விண்ணப்பித்தவர்களுக்கு பாண்டு பத்திரம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/27/2012 2:26:56 PM
-Updated 8/26/2012 11:46:53 AM
-Updated 8/25/2012 2:27:09 PM
-Updated 8/25/2012 2:26:49 PM
-Updated 8/25/2012 1:33:04 PM
-Updated 8/25/2012 1:32:49 PM
-Updated 8/25/2012 1:12:23 PM
-Updated 8/25/2012 12:33:33 PM
-Updated 8/24/2012 4:02:31 PM
-Updated 8/24/2012 4:02:12 PM
-Updated 8/24/2012 4:01:54 PM
-Updated 8/24/2012 3:59:18 PM
-Updated 8/24/2012 3:59:01 PM
-Updated 8/24/2012 12:56:40 PM
-Updated 8/22/2012 11:39:55 AM