நாகர்கோவிலில் நள்ளிரவில் பயங்கரம் குடும்பத்தினர் கண் எதிரே மெக்கானிக் வெட்டி கொலை
நாகர்கோவில்: வீட்டில் பேசிக் கொண்டிருந்த மெக்கானிக்கை ஓட ஓட விரட்டிக் கொன்றவர்களைப் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் கோட்டாறு பெரியவிளை பாண்டியன் தெருவை சேர்ந்தவர் சுயம்புலிங்கம் (60). இவரது மகன் விஜிகுமார் (26). மெக்கானிக். 2 நாட்களுக்கு முன், பெரியவிளை அருகே உள்ள வட்டவிளையில் அம்மன் கோயில் திருவிழா நடந்தது. இதை பார்க்க விஜிகுமார் தனது நண்பர்களுடன் சென்று இருந்தார். அப்போது விஜிகுமார் தரப்பினருக்கும், வட்டவிளை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்ற வாழைக்காய் சுரேஷ் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் அவர்களை விலக்கி விட்டுள்ளனர். விஜிகுமாரின் சகோதரிக்கு தற்போது திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த ஏற்பாடுகள் குறித்து நேற்று இரவு சுயம்புலிங்கம், தனது மனைவி மற்றும் மகள்கள், மகன்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 11 மணியளவில் திடீரென வீட்டின் வெளியே ஆள் நடமாட்டம் இருந்தது. இந்த சத்தம் கேட்டு விஜிகுமாரும், அவரது அண்ணன் பிரபுவும் வீட்டில் இருந்து வெளியே வந்தனர்.
விஜிகுமாரை பார்த்ததும், அங்கே பதுங்கி இருந்த ஒரு கும்பல் கையில் அரிவாள், கத்தியுடன் ஓடி வந்தது. இதை பார்த்ததும் விஜிகுமார் அங்கிருந்து ஓடினார். அவரை துரத்திச் சென்ற 6 பேர் கும்பல், சரமாரியாக வெட்டியது. 25க்கும் அதிகமான இடங்களில் வெட்டுப்பட்ட விஜிகுமார் படுகாயமடைந்து இறந்தார். மகனை வெட்டுவதை தடுக்க விஜிகுமாரின் குடும்பத்தினரும் வந்தனர். அவர்களையும் கும்பல் வெட்டிவிட்டு தப்பியது. இதில் சுயம்புலிங்கம் படுகாயம் அடைந்தார். தங்கள் கண் எதிரிலேயே விஜிகுமாரை துரத்தி வெட்டி கொலை செய்ததை பார்த்து அவரது தாய் மற்றும் தங்கை கள், சகோதரர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து கோட்டாறு போலீசார் வழக்கு பதிந்து வட்டவிளையை சேர்ந்த வாழைக்காய் சுரேஷ், பெரியவிளையை சேர்ந்த சுரேஷ், விக்னேஷ், பாஸ்கரன், வருண் என்ற கொசு முட்டை மற்றும் ஒருவர் உள்பட 6 பேரை தேடி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கோயில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்னையே கொலைக்கு காரணம் என கூறப்படுகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/26/2012 3:14:05 PM
-Updated 8/26/2012 11:46:53 AM
-Updated 8/25/2012 2:27:09 PM
-Updated 8/25/2012 2:26:49 PM
-Updated 8/25/2012 1:32:49 PM
-Updated 8/25/2012 1:12:23 PM
-Updated 8/25/2012 12:33:33 PM
-Updated 8/24/2012 4:02:31 PM
-Updated 8/24/2012 4:02:12 PM
-Updated 8/24/2012 4:01:54 PM
-Updated 8/24/2012 3:59:18 PM
-Updated 8/24/2012 3:59:01 PM
-Updated 8/24/2012 12:56:40 PM
-Updated 8/22/2012 11:39:55 AM
-Updated 8/20/2012 2:52:53 PM