நாகர்கோவில்: கிறிஸ்தவ ஆலயம் திடீரென இடிக்கப்பட்டதால் நாகர்கோவிலில் பதற்றம் ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் 70 ஆண்டு பழமை வாய்ந்த புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயம் உள்ளது. இந்த பங்கு நிர்வாகம் தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்னை உள்ளது. பழையான ஆலயத்தை இடித்து புதியதாக கட்ட முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பிரச்னை தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் ஆலயத்தின் தென்புற பகுதியை இடித்தனர். இதில் ஆலயத்தின் ஒருபகுதி முழுவதும் இடிந்து விழுந்தது. இந்த சத்தம் கேட்டு எதிர்தரப்பினர் பெருமளவில் திரண்டனர். ஆலயத்தை இடிக்க வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது இருதரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை உருவானது. இதனால் அங்கு பதற்றம் அதிகரித்தது. தகவலறிந்த டிஎஸ்பி ரத்தினவேல் மற்றும் அதிரடிப்படை போலீசார் அங்கு விரைந்து வந்தனர். ஆலயத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அங்கு பதற்றம் நீடிப்பதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/26/2012 3:14:05 PM
-Updated 8/26/2012 11:46:53 AM
-Updated 8/25/2012 2:27:09 PM
-Updated 8/25/2012 2:26:49 PM
-Updated 8/25/2012 1:33:04 PM
-Updated 8/25/2012 1:32:49 PM
-Updated 8/25/2012 1:12:23 PM
-Updated 8/25/2012 12:33:33 PM
-Updated 8/24/2012 4:02:12 PM
-Updated 8/24/2012 4:01:54 PM
-Updated 8/24/2012 3:59:18 PM
-Updated 8/24/2012 3:59:01 PM
-Updated 8/24/2012 12:56:40 PM
-Updated 8/22/2012 11:39:55 AM
-Updated 8/20/2012 2:52:53 PM