ஊத்துக்கோட்டை : பொன்னேரி அடுத்த காட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் குட்டி (25). லாரி கிளீனர். இவருக்கும் அரசூர் கிராமத்தை சேர்ந்த உறவுக்கார பெண்ணுக்கும் 10 நாளில் திருமணம் நடக்க இருந்தது. நண்பர்கள், உறவினர்களுக்கு திருமண பத்திரிகை கொடுத்து வந்தனர். நேற்று இரவு, பொன்னேரியில் இருந்து தச்சூர் கூட்டுசாலைக்கு பஸ்சில் சென்றார் குட்டி. கூட்டம் அதிகமாக இருந்ததால் பஸ் படிக்கட்டில் நின்றிருந்தார். எதிர்பாராதவிதமாக கால் தவறி, ரோட்டில் விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவரை சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி குட்டி இன்று காலை பரிதாபமாக இறந்தார். பொன்னேரி இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்கு பதிவு செய்து, குட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/20/2012 2:52:53 PM
-Updated 8/20/2012 1:19:31 PM
-Updated 8/20/2012 1:19:14 PM
-Updated 8/20/2012 1:18:41 PM
-Updated 8/20/2012 1:15:09 PM
-Updated 8/20/2012 1:14:59 PM
-Updated 8/20/2012 1:09:07 PM
-Updated 8/20/2012 1:08:55 PM
-Updated 8/14/2012 2:25:02 PM
-Updated 8/14/2012 2:24:35 PM
-Updated 8/14/2012 2:24:04 PM
-Updated 8/14/2012 2:23:44 PM
-Updated 8/14/2012 2:20:36 PM
-Updated 8/14/2012 2:20:13 PM
-Updated 8/13/2012 3:48:44 PM