ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு மின்சார கம்பத்தில் ஏறி போதை ஆசாமி மிரட்டல்
சென்னை : ஸ்ரீபெரும்புதூர் அருகே 75 அடி உயர மின் கம்பத்தில் குடிபோதையில் ஏறிய முதியவர் தற்கொலை செய்வதாக மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வளர்புரம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் கஷ்பர் (50). இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கஷ்பர் கட்டிட வேலை செய்கிறார். தினமும் மது குடிக்கும் பழக்கம் உடையவர். நேற்று காலையில் இருந்தே குடித்ததால் போதை அதிகமாகி அங்குள்ள 75 அடி மின் கம்பத்தில் ஏறினார். இதை பார்த்த மக்கள், கீழே இறங்கும்படி கூச்சலிட்டனர். அதற்கு அவர் Ôகீழே இறங்க மாட்டேன். யாராவது காப்பாற்ற நினைத்தால் குதித்து தற்கொலை செய்து கொள்வேன்Õ என மிரட்டினார். இது பற்றி தகவல் கிடைத்ததும் ஸ்ரீபெரும்புதூர் இன்ஸ்பெக்டர் நாகலிங்கமும், தீயணைப்பு துறை அதிகாரி செந்தில் குமரனும் அங்கு விரைந்தனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டு, கஷ்பரை தீயணைப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/20/2012 2:52:53 PM
-Updated 8/20/2012 1:19:31 PM
-Updated 8/20/2012 1:19:14 PM
-Updated 8/20/2012 1:18:57 PM
-Updated 8/20/2012 1:15:09 PM
-Updated 8/20/2012 1:14:59 PM
-Updated 8/20/2012 1:09:07 PM
-Updated 8/20/2012 1:08:55 PM
-Updated 8/14/2012 2:25:02 PM
-Updated 8/14/2012 2:24:35 PM
-Updated 8/14/2012 2:24:04 PM
-Updated 8/14/2012 2:23:44 PM
-Updated 8/14/2012 2:20:36 PM
-Updated 8/14/2012 2:20:13 PM
-Updated 8/13/2012 3:48:44 PM