நேருக்கு நேர் விசாரணையில் பரபரப்பு தீவிரவாதிகள் கசாப் அபு ஜிண்டால் ஒருவரையொருவர் காட்டி கொடுத்தனர்
மும்பை: தீவிரவாதிகள் கசாப் அபு ஜிண்டாலை நேருக்குநேர் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ஒருவரையொருவர் அடையாளம் காட்டினர். மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் உள்ளிட்ட 10 தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில் 9 தீவிரவாதிகளை அதிரடிப்படையினர் சுட்டுக் கொன்றனர். அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். அவன் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். மும்பை தீவிரவாத தாக்குதலை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி அபு ஜிண்டாலை கடந்த ஜூன் மாதம் டெல்லி போலீசார் கைது செய்தனர். விசாரணையில் நாடு முழுவதும் நடந்த குண்டு வெடிப்புகளில் ஜிண்டாலுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. டெல்லி ஜும்மா மசூதி குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணை முடிந்ததும் அவன் மும்பை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான். மும்பை தாக்குதல் வழக்கில் ஜிண்டாலையும், கசாப்பையும் நேருக்கு நேர் வைத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதற்கு அனுமதி கேட்டு மகாராஷ்டிரா அரசுக்கு போலீசார் கடிதம் எழுதி இருந்தனர். அதற்கான அனுமதியை அரசு வழங்கியது.
இதையடுத்து, இன்று காலை பலத்த பாதுகாப்புடன் ஜிண்டாலை மும்பை ஆர்தர் சாலை சிறைக்கு அழைத்து சென்றனர். அங்கு இருவரையும் நேருக்கு நேர் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மும்பை தாக்குதலுக்கு தனக்கு பயிற்சி அளித்தவர் இவர்தான் என அபு ஜிண்டாலை கசாப் அடையா ளம் காட்டினான். அதேபோல் மும்பையில் தாக்குதல் நடத்துவதற்கு பயிற்சி அளித்த 10 தீவிரவாதிகளில் கசாப்பும் ஒருவர் என்று ஜிண்டால் அடையாளம் காட்டினான். இருவரிடமும் ஒன்றரை மணிநேரம் விசாரணை நடந்தது. இதில் கிடைத்த தகவல்களை கொண்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/12/2025 11:46:30 AM
-Updated 8/12/2025 11:36:59 AM
-Updated 8/12/2025 11:36:04 AM
-Updated 8/12/2025 11:32:57 AM
-Updated 8/11/2025 12:38:34 PM
-Updated 8/10/2025 2:44:30 PM
-Updated 8/10/2025 2:38:44 PM
-Updated 8/10/2025 1:14:40 PM
-Updated 8/10/2025 1:13:55 PM
-Updated 8/10/2025 12:59:22 PM
-Updated 8/10/2025 12:25:57 PM
-Updated 8/10/2025 12:25:32 PM
-Updated 8/10/2025 11:49:25 AM
-Updated 8/9/2025 2:58:45 PM
-Updated 8/9/2025 2:58:29 PM