உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல் அரசு கட்டிட பணிக்கு ஜல்லி மணல்: முதல்வரை சந்திக்க முடிவு
சென்னை: தமிழ்நாடு தயாரிக்கப்பட்ட மணல் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கே.சின்னசாமி அளித்த பேட்டி: தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. மணல் தட்டுப்பாட்டை போக்க ஜல்லி கிரஷ்ஷரில் இருந்து தயாரிக்கப்பட்ட ஜல்லி மணலை (எம்சாண்ட்) உற்பத்தி செய்ய தொடங்கி உள்ளோம். தமிழகத்தில் தற்போது உள்ள 1000 கிரஷர்களில், 50 கிரஷர்கள் ஜல்லி மணல் தயாரிக்கின்றன. இவற்றில் இருந்து சுமார் 5000 யூனிட் அளவு மணல் உற்பத்தி செய்யப்படுகிறது. இயற்கை மணல் ஒரு யூனிட் ரூ.2,500 முதல் ரூ.4,000 வரை விற்கப்படுகிறது. ஆனால், ஜல்லி மணல் வெறும் ரூ.1500 முதல் ரூ.2000 வரைதான் விற்கப்படுகிறது. தனியார் நிறுவனங்கள், ஜல்லி மணலை பயன்படுத்த தொடங்கி விட்டன. ஆனால் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்று இதர துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளுக்கு ஜல்லி மணலை பயன்படுத்த முறையான ஒப்புதலை வழங்கவில்லை. எனவே, முதல்வர் இதற்கு அனுமதி அளித்து ஆணை பிறப்பிக்க வேண்டும். இது சம்பந்தமாக இன்னும் ஓரிரு நாளில் முதல்வரை சந்தித்து பேச உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில செயலாளர் பி.பி. செல்வசுந்தரம், பொருளாளர் வீரப்பன் கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/12/2025 11:46:30 AM
-Updated 8/12/2025 11:36:59 AM
-Updated 8/12/2025 11:36:04 AM
-Updated 8/12/2025 11:32:57 AM
-Updated 8/11/2025 12:38:34 PM
-Updated 8/10/2025 2:46:39 PM
-Updated 8/10/2025 2:44:30 PM
-Updated 8/10/2025 2:38:44 PM
-Updated 8/10/2025 1:13:55 PM
-Updated 8/10/2025 12:59:22 PM
-Updated 8/10/2025 12:25:57 PM
-Updated 8/10/2025 12:25:32 PM
-Updated 8/10/2025 11:49:25 AM
-Updated 8/9/2025 2:58:45 PM
-Updated 8/9/2025 2:58:29 PM