கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகனை கொல்ல முயன்ற அம்மா சிறையில் அடைப்பு
திருப்பதி: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனை காதலனுடன் சேர்ந்து கொல்ல முயன்ற அம்மாவை போலீசார் கைது செய்தனர். சித்தூர் மாவட்டம் மதனபள்ளி அடுத்த பெத்தமாண்டியம் மண்டலம் சிவப்புரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகமணி (28). கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்த இவர், மகன் ரவீந்திரா (6)வுடன் தனது அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார். பக்கத்து கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (30) என்பவருடன் நாகமணிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் தனியாக குடும்பம் நடத்தி வந்தனர். தங்கள் சந்தோஷத்துக்கு இடையூறாக உள்ள ரவீந்திராவை அம்மா வீட்டில் விட்டுவிடுமாறு நாகமணியிடம் ரமேஷ் கூறியுள்ளார். ஆனால் ரவீந்திரா, பாட்டி வீட்டுக்கு செல்ல மறுத்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த நாகமணியும் ரமேஷும் நேற்று ரவீந்திராவை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்து சரமாரியாக தடியால் தாக்கினர். உடலில் சுடு வைத்துள்ளனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். தகவல் கிடைத்து வந்த மதனபள்ளி போலீசார் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். நாகமணியை கைது செய்த போலீசார், தப்பியோடிய ரமேஷை தேடி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/11/2025 12:38:34 PM
-Updated 8/10/2025 2:46:39 PM
-Updated 8/10/2025 2:44:30 PM
-Updated 8/10/2025 2:38:44 PM
-Updated 8/10/2025 1:14:40 PM
-Updated 8/10/2025 1:13:55 PM
-Updated 8/10/2025 12:59:22 PM
-Updated 8/10/2025 12:25:57 PM
-Updated 8/10/2025 12:25:32 PM
-Updated 8/10/2025 11:49:25 AM
-Updated 8/9/2025 2:58:45 PM
-Updated 8/9/2025 2:39:56 PM
-Updated 8/9/2025 2:13:24 PM
-Updated 8/9/2025 1:26:52 PM
-Updated 8/9/2025 1:13:25 PM