பெரம்பூர்: கொடுங்கையூர் நர்ஸ் கொலையில் கணவர், உறவினர், ஆஸ்பத்திரி ஊழியர்கள் உள்பட 100க்கு மேற்பட்டோரிடம் போலீசார் விசாரித்துள்ளனர். ஆனால் சரியான துப்பு கிடைக்காமல் தனிப்படையினர் திணறி வருகிறார்கள். கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் முனுசாமி (40). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சுமதி (33). எம்கேபி நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றினார். கடந்த மாதம் 30ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபரால் சுமதி கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொலையாளியை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. கொலை நடந்த வீட்டில் எதுவும் திருட்டு போகவில்லை. நகை, பணத்துக்காக கொலை நடக்கவில்லை என்பதை போலீசார் உறுதி செய்தனர். சுமதியின் கணவர் மீது போலீசாருக்கு முதலில் சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரித்தில் கொலையில் அவர் சம்பந்தப்படவில்லை என்பது தெரியவந்தது. மேலும் சுமதி வேலை பார்த்த மருத்துவமனை, அவரது உறவினர், அக்கம் பக்கத்தினர், தெரிந்த நபர் உள்பட 100 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரித்தனர். ஆனால் கொலை தொடர்பாக எந்த துப்பும் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொடுங்கையூரை சேர்ந்த பாப்பாத்தியம்மாள் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஓராண்டிற்கு பிறகு கடந்த மாதம்தான் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அதே போல் நர்ஸ் கொலையில் மர்மம் நீடித்து வருகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/12/2025 11:46:30 AM
-Updated 8/12/2025 11:36:59 AM
-Updated 8/12/2025 11:36:04 AM
-Updated 8/12/2025 11:32:57 AM
-Updated 8/11/2025 12:38:34 PM
-Updated 8/10/2025 2:46:39 PM
-Updated 8/10/2025 2:44:30 PM
-Updated 8/10/2025 2:38:44 PM
-Updated 8/10/2025 1:14:40 PM
-Updated 8/10/2025 1:13:55 PM
-Updated 8/10/2025 12:59:22 PM
-Updated 8/10/2025 12:25:57 PM
-Updated 8/10/2025 12:25:32 PM
-Updated 8/10/2025 11:49:25 AM
-Updated 8/9/2025 2:58:45 PM