திமுக முன்னாள் எம்.எல்.ஏவின் அண்ணனுக்கு சரமாரி வெட்டு: கரூர் அருகே சாலை மறியல்
கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் முன்னாள் திமுக எம்.எல்.ஏ. காமராஜ். இவரது அண்ணன் சுப்புராயன் (50), நெரூர் வடபாகத்தில் வசித்து வருகிறார். இவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆவார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அதிமுகவினருக்கும் தேர்தல் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த பகுதியில் உள்ள அரசு மணல் குவாரியில் அதிமுகவினருக்கு மட்டும் வேலை கொடுத்து உள்ளனர். மற்ற கட்சியினருக்கும் வேலை கொடுங்கள் என சுப்பு ராயன் தட்டி கேட்டார். இதனால் அதிமுகவினருக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டது. கடந்த வாரம் அதிமுக சார்பில் நடந்த கபடி போட்டியிலும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று காலை சுப்புராயன் டீக்கடைக்கு சென்றார். அப்போது அதிமுக பிரமுகர்கள் சுப்பிரமணி (40), நீதி (32) ஆகியோர் அங்கு வந்து சுப்புராயனை வழிமறித்து அரிவாளால் வெட்டினர். படுகாயமடைந்த அவர் கரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்த திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், அவர்களை சமாதானம் செய்தனர். அதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதற்கிடையே நீதியும் தலையில் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தன்னை எதிர்தரப்பினர் வெட்டிவிட்டதாக கூறினார். இது குறித்தும் போலீசார் விசாரிக்கிறார்கள்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/11/2025 12:38:34 PM
-Updated 8/10/2025 2:46:39 PM
-Updated 8/10/2025 2:44:30 PM
-Updated 8/10/2025 2:38:44 PM
-Updated 8/10/2025 1:14:40 PM
-Updated 8/10/2025 1:13:55 PM
-Updated 8/10/2025 12:59:22 PM
-Updated 8/10/2025 12:25:57 PM
-Updated 8/10/2025 12:25:32 PM
-Updated 8/10/2025 11:49:25 AM
-Updated 8/9/2025 2:58:45 PM
-Updated 8/9/2025 2:58:29 PM
-Updated 8/9/2025 2:39:56 PM
-Updated 8/9/2025 1:26:52 PM
-Updated 8/9/2025 1:13:25 PM