கல் விலையை குறைக்க அரசுக்கு கிரஷர் உரிமையாளர்கள் கோரிக்கை
தாம்பரம்: காஞ்சிபுரம் மாவட்ட கிரஷர் உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் தாம்பரத்தில் நேற்று நடந்தது. கூட்டமைப்பு தலைவர் ரவி தலைமை தாங்கினார். இதில் 200க்கும் மேற்பட்ட கிரஷர் உரிமையாளார்கள் கலந்து கொண்டனர். இதில் முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது என முடிவெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நிருபர்களிடம் ரவி கூறுகையில், ‘Ôமாவட்டத்தில், மொத்தம் 470 கிரஷர்கள் உள்ளன. கடந்த சில வருடங்களாக குவாரிகளில் விற்கப்படும் கல் (சக்கை) விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதை குறைப்பதாக குவாரி முதலாளிகள் அரசுக்கு உறுதியளித்தனர். ஆனால் குறைக்கவில்லை. உயர்த்தி விட்டனர். தற்போது மின்சார கட்டணம், டீசல் விலை உயர்ந்துள்ளது. குத்தகை காலம் முடிவடைந்ததால் மாவட்டத்தில் குறைந்த அளவு குவாரிகளே இயங்குகின்றன. அனைத்து குவாரிகளையும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக முதல்வரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்ÕÕ என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/11/2025 12:38:34 PM
-Updated 8/10/2025 2:46:39 PM
-Updated 8/10/2025 2:44:30 PM
-Updated 8/10/2025 2:38:44 PM
-Updated 8/10/2025 1:14:40 PM
-Updated 8/10/2025 1:13:55 PM
-Updated 8/10/2025 12:59:22 PM
-Updated 8/10/2025 12:25:57 PM
-Updated 8/10/2025 12:25:32 PM
-Updated 8/10/2025 11:49:25 AM
-Updated 8/9/2025 2:58:45 PM
-Updated 8/9/2025 2:58:29 PM
-Updated 8/9/2025 2:39:56 PM
-Updated 8/9/2025 2:13:24 PM
-Updated 8/9/2025 1:26:52 PM