ஜெனரேட்டர் வசதி கோரி செங்கல்பட்டு ஜி.ஹெச்.சில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
திருக்கழுக்குன்றம்: செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஜெனரேட்டர் வசதி கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு மாவட்ட குழு உறுப்பினர் ரவி தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் சண்முகம், நிர்வாகிகள் சிவகுமார், சேஷாத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் அன்பு, வேலன், பாபு, நரசிம்மன், ராஜலட்சுமி, மீனா மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மருத்துவமனையில் மகப்பேறு வார்டுக்கு எதிரில் மூடி கிடக்கும் கழிப்பிடத்தை உடனே திறக்க வேண்டும், அனைத்து வார்டுகளிலும் கழிவறையை முறையாக பராமரிக்க வேண்டும், மருத்துவர், செவிலியர், பணியாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், மருத்துவமனை பணியாளர்கள் லஞ்சம் வாங்குவதை தடுக்க வேண்டும், அடிக்கடி மின்தடையால் அறுவை சிகிச்சையின் போது பிரச்னை ஏற்படுவதால் ஜெனரேட்டர் வசதி செய்து தரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/11/2025 12:38:34 PM
-Updated 8/10/2025 2:46:39 PM
-Updated 8/10/2025 2:44:30 PM
-Updated 8/10/2025 2:38:44 PM
-Updated 8/10/2025 1:14:40 PM
-Updated 8/10/2025 1:13:55 PM
-Updated 8/10/2025 12:59:22 PM
-Updated 8/10/2025 12:25:57 PM
-Updated 8/10/2025 12:25:32 PM
-Updated 8/10/2025 11:49:25 AM
-Updated 8/9/2025 2:58:45 PM
-Updated 8/9/2025 2:58:29 PM
-Updated 8/9/2025 2:39:56 PM
-Updated 8/9/2025 2:13:24 PM
-Updated 8/9/2025 1:26:52 PM