2012
07
Aug
முகப்பேரில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ.10 கோடி அரசு நிலம் மீட்பு


ஆவடி: முகப்பேரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 10 கோடி ரூபாய் மதிப்பு அரசு நிலத்தை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். நிலத்தை ஆக்கிரமிப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். சென்னை அருகே அம்பத்தூர் முகப்பேர் யஸ்வந்த் நகரில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அந்த இடத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளதாக திருவள்ளூர் கலெக்டர் ஆசிஸ் சட்டர்ஜிக்கு தெரியவந்தது. அவரின் உத்தரவின்படி, அம்பத்தூர் மண்டல அதிகாரி சிவஞானம், தாசில்தார் ராஜூ, வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் அந்த இடத்தை பார்வையிட்டனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து, இன்று காலை அதிகாரிகள் தலைமையில் மாநகராட்சி, வருவாய் ஊழியர்கள் சென்றனர். ஜெசிபி மூலம் அரசு நிலத்தில் உள்ள சுவரை இடித்து தள்ளினர். ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து 60 சென்ட் அரசு நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு 10 கோடி ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  ‘அரசு நிலத்தை ஆக்கிரமிப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று வருவாய்த்துறை அதிகாரி எச்சரித்து உள்ளார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,