திருப்பதி: சித்தூர் மாவட்டம் மதனபள்ளி காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் ஸ்ரீகாந்த்(16), வெங்கடேஷ்(20), கங்கராஜூ(15), கட்டிட தொழிலாளிகள். இவர்கள் 3 பேரும் புங்கனூர் அடுத்த போயகொண்டா கங்கையம்மன் கோயிலுக்கு நேற்று சென்றனர். சாமி கும்பிட்டு விட்டு 3 பேரும் இரவில் பைக்கில் வீடு திரும்பினர். பைக்கை வெங்கடேஷ் ஓட்டினார். மதனபள்ளி அருகே உள்ள டிரைவர்ஸ் காலனி அருகே வந்தபோது, முன்னால் சென்ற பஸ்சை முந்திச்செல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராமல் எதிரே வந்த லாரி மீது பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த 3 பேரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்தப்பகுதியில் சுமார் 2மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 7/23/2012 4:04:53 PM
-Updated 7/23/2012 2:07:47 PM
-Updated 7/23/2012 2:06:12 PM
-Updated 7/16/2012 3:21:05 PM
-Updated 7/16/2012 3:20:45 PM
-Updated 7/9/2025 2:55:47 PM
-Updated 7/9/2025 2:37:28 PM
-Updated 7/9/2025 2:36:58 PM
-Updated 7/9/2025 2:36:36 PM
-Updated 7/9/2025 2:29:35 PM
-Updated 7/2/2025 3:39:05 PM
-Updated 7/2/2025 3:26:05 PM
-Updated 7/2/2025 2:41:28 PM
-Updated 7/2/2025 2:36:45 PM
-Updated 7/2/2025 12:44:01 PM