திருத்தணி: திருத்தணியில் சாராயம் கடத்திய துணை நடிகர் சிக்கினார். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். திருத்தணி ஏஎஸ்பி விஜயகுமார் தலைமையில் போலீசார் நேற்று திருத்தணி பை பாஸ் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த இண்டிகா காரை மறித்து சோதனை நடத்தினர். சீட்டுக்கு அடியில் கேனிலும் பாக்கெட்டிலும் கள்ள சாராயம் அடுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சாராயம் கடத்தி வந்த திருத்தணி பை பாஸ் சாலையை சேர்ந்த செல்வன் (35) என்பவரை கைது செய்து விசாரித்தனர். தமிழ் படத்தில் துணை நடிகராக நடிப்பவர் செல்வன் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவரை கைது செய்து, திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். காரை, திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 7/9/2025 2:55:47 PM
-Updated 7/9/2025 2:37:28 PM
-Updated 7/9/2025 2:36:58 PM
-Updated 7/9/2025 2:29:35 PM
-Updated 7/2/2025 3:39:05 PM
-Updated 7/2/2025 3:26:05 PM
-Updated 7/2/2025 2:41:28 PM
-Updated 7/2/2025 2:36:45 PM
-Updated 7/2/2025 12:44:01 PM
-Updated 6/26/2012 5:22:51 PM
-Updated 6/26/2012 5:00:44 PM
-Updated 6/26/2012 3:13:14 PM
-Updated 6/26/2012 3:12:36 PM
-Updated 6/26/2012 3:08:53 PM
-Updated 6/26/2012 3:08:38 PM