சென்னையில் ராமதாஸ் தலைமையில் நாளை மறுநாள் மது கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம்
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கை: மதுவின் தீமையில் இருந்து எதிர்கால தலைமுறையினரை மீட்க தமிழகத்தில் உள்ள 6172 மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் அறவழி போராட்டம் 11ம் தேதி காலை 11 மணிக்கு தமிழகம் முழுவதும் நடக்க உள்ளது. சென்னை தி.நகர் தெற்கு போக் சாலையில் ம.பொ.சி. சிலைக்கு எதிரில் உள்ள மதுக்கடைக்கு முன்பு நடைபெறும் போராட்டத்துக்கு நான் தலைமை ஏற்கிறேன். காஞ்சிபுரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி தலைமையிலும், ஈரோட்டில் பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையிலும் மதுக்கடைளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடக்கிறது. விருதுநகரில் வடிவேல் ராவணன் தலைமையில் நடக்கிறது. இதேபோல் மற்ற இடங்களில் நடக்கும் போராட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் தலைமை ஏற்பார்கள்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 7/9/2025 2:55:47 PM
-Updated 7/9/2025 2:37:28 PM
-Updated 7/9/2025 2:36:58 PM
-Updated 7/9/2025 2:36:36 PM
-Updated 7/2/2025 3:39:05 PM
-Updated 7/2/2025 3:26:05 PM
-Updated 7/2/2025 2:41:28 PM
-Updated 7/2/2025 2:36:45 PM
-Updated 7/2/2025 12:44:01 PM
-Updated 6/26/2012 5:22:51 PM
-Updated 6/26/2012 5:00:44 PM
-Updated 6/26/2012 3:13:14 PM
-Updated 6/26/2012 3:12:36 PM
-Updated 6/26/2012 3:08:53 PM
-Updated 6/26/2012 3:08:38 PM