போலீஸ் சுட்ட விவகாரம் : ரவுடி கார்த்திக்கை கஸ்டடி எடுக்க முடிவு
கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு போலீசார் வாகன சோதனை நடத்தியபோது நிற்காமல், போலீசார் மீது மோதுவது போல சென்ற காரை கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் துப்பாக்கியால் சுட்டார். அந்த காரில் இருந்த 5 பேரில் ரஞ்சித்குமார் (21) தொடையில் குண்டு பாய்ந்து, பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். காரில் இருந்த நந்திவரத்தை சேர்ந்த ரவுடி குட்டா கார்த்திக்கை (28) போலீசார் கைது செய்து, செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். பிடிபட்ட மணிகண்டன், சுரேஷ், ரியாஸ் ஆகியோரிடம் விசாரிக்கின்றனர். இப்போது சிறையில் இருக்கும் குட்டா கார்த்திக்கை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாக செங்கல்பட்டு டிஎஸ்பி தணிகைவேல் கூறினார். அப்போது மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 7/2/2025 3:26:05 PM
-Updated 7/2/2025 2:41:28 PM
-Updated 7/2/2025 2:36:45 PM
-Updated 7/2/2025 12:44:01 PM
-Updated 6/26/2012 5:22:51 PM
-Updated 6/26/2012 5:00:44 PM
-Updated 6/26/2012 3:13:14 PM
-Updated 6/26/2012 3:12:36 PM
-Updated 6/26/2012 3:08:53 PM
-Updated 6/26/2012 3:08:38 PM
-Updated 6/26/2012 3:07:21 PM
-Updated 6/26/2012 3:06:31 PM
-Updated 6/26/2012 3:06:12 PM
-Updated 6/26/2012 2:54:23 PM
-Updated 6/26/2012 12:16:16 PM